தமிழ் மின்னெழுத்து திட்டம் Announcementstag:launchpad.net,2008-09-12:/freetamilfonts/+announcementshttps://launchpad.net/@@/product-logohttps://launchpad.net/@@/product2008-09-12T02:34:00.903499+00:00மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..2008-09-12T02:34:00.903499+00:002008-09-12T02:34:00.856480+00:00tag:launchpad.net,2008-09-12:/+announcement/1043ஆமாச்சுhttps://launchpad.net/~amachu
டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம்

பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு.

இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு

மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்)

ஆகிய இரு தினங்களில் ‘மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு’ ஒன்றை

நடத்த உள்ளோம்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் இரண்டு.

1) அடுத்த ஆறுமாதங்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற சில மின்

எழுத்துக்களை உருவாக்கி டெபியன்/ உபுண்டு போன்ற பிரபல குனு லினக்ஸ்

வழங்கல்களின் மென் களஞ்சியங்களில் சேர்ப்பது.

2) கட்டற்ற கருவிகள் கொண்டு மின்னெழுத்துக்கள் உருவாக்கும் முறையை

கையேடாக கொண்டு வருதல்.

இந்நோக்கங்களில் எங்களுக்கு துணை புரிய விழைவோரை இந்நிகழ்வில் பங்கு

கொள்ள அழைக்கிறோம். அழகிய தமிழ் மின்னெழுத்துக்கள் படைக்க

ஆர்வமிருப்போரும் கலந்து கொண்டு பலனடையலாம். இந்நாட்களில் நமக்காக

பாடங்களை எடுக்க சுதந்தர மலையாளக் கணிமையின் ஹிரன் வேணுகோபாலன்

இசைந்துள்ளார்.

சென்னை, குரோம்பேட்டை, எம் ஐ டி, வளாகத்தில் உள்ள என். ஆர். சி. பாஸில்

வகுப்புகள் நடைபெறும். முன்பதிய amachu@ubuntu.com முகவரிக்கு

தங்களைப் பற்றிய விவரங்களுடன் மடல் அனுப்பவும்.

பி.கு: பிற மொழி மின்னெழுத்துக்கள் படைக்க ஆர்வமிருப்போரும் கலந்து கொள்ளலாம்.